Publisher's Synopsis
உண்மை என்பது புனை கதையைவிட வினோதமானது என்று சொல்வார்கள். இந்தக் கதையை நான் கேட்டபோது எனக்கு அப்படித்தான் இருந்தது. இப்படியெல்லாம்கூட நிஜ வாழ்வில், படித்த நாகரீக குடும்பங்களில் நடக்குமா என்கிற அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தப் புதினத்தில் என்னுடைய கற்பனை இருபது சதவிகிதம்தான் இருக்கும். இதில் வரும் சம்பவங்கள் எல்லாம் கதைப் போக்கிற்கு ஏற்ப மாறியிருக்குமே தவிர அவ்வளவும் உண்மை என்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. இந்த நாவல் எந்தப் பெண்ணிய கோஷத்தையும் எழுப்பும் எண்ணத்துடன் எழுதப்பட்டது இல்லை. உள்ளது உள்ளபடி என்று ஒரு வெகுளித்தனத்துடன் கேட்ட கதையைத் திருப்பிச் சொன்னதாகத்தான் தோன்றுகிறது.
- வாஸந்தி