Publisher's Synopsis
தீவிரவாதிகளுக்கு எதிரான, சமீபத்திய தாக்குதல்களின் இதுவரை சொல்லப்படாத கதைகள் 2016-ல் நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்குக்குப் பின் நடத்தப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள், பகல், இரவாக மாறி மாயாஜாலம் நிகழ்த்தும் காஷ்மீர் காடுகளில் தீவிரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல், நீர்மூழ்கிக் கப்பலில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றிய கடற்படையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தன் ஜோடிகளுக்கு நடந்தவற்றிற்கு பழிவாங்கும்வரை தூங்காமல் இருந்த இந்திய விமானப்படை வீரர், பாகிஸ்தான் நிலப்பரப்பில் இறங்கி தீவிரவாதிகளைத் தாக்குவதில் தன் ஆத்ம தாகத்தைத் தீர்த்துக்கொண்ட வரித்துறை அதிகாரி... மற்றும் பல... அவர்களின் கதைகள் அவர்கள் சொற்களில் அல்லது அவர்களுடன் அவர்களின் இறுதி நிமிடங்களில் இருந்தவர்களின் வார்த்தைகளில்... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீரமிக்க இந்தியர்கள் இரண்டாம் பகுதி பதினான்கு கதைகளுடன் உங்களைச் சந்தித்து, முன்னெப்போதும் இல்லாத நெருக்கத்தில், கடமையின் அழைப்பை ஏற்று சாதனை புரிந்த வீரர்களிடம் உங்களை அழைத்துச் செல்கிறது! ""தீரமிக்க இந்தியர்கள் இரண்டாம் பகுதி மீண்டும் சாதனை புரிந்திருக்கிறது. இராணுவ வீரர்களின் சாகசங்களையும், சாதனைகளையும், பிரமிக்க வைக்கும் புள்ளிவிவரங்களுடன் படம் பிடித்துக் காட்டுகிறது!.""